Latest Updates
-
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது!
Kalyana Veetu Senai Kizhangu Varuval Recipe In Tamil: பொதுவாக சேனைக்கிழங்கு சாப்பிடவே பலரும் யோசிப்பார்கள். ஏனெனில் சேனைக்கிழங்கு நாக்கில் அரிப்பை ஏற்படுத்தும். இதனாலேயே சேனைக்கிழங்கு பிடித்தாலும் சாப்பிட பலரும் மறுப்பார்கள். ஆனால் கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் சேனைக்கிழங்கு வறுவல் மட்டும் நாக்கில் அரிப்பை ஏற்படுத்தாது. இதற்கு அந்த சேனைக்கிழங்கு வறுவல் செய்யும் பக்குவம் தான் காரணம். உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கு வறுவலை வீட்டில் செய்து கொடுங்கள்.

உங்களுக்கு கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1/2 கப் (எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து
எடுத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேக வைத்த சேனைக்கிழங்கு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறி மசாலா/சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, ஓரளவு சற்று பெரிய
துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த சேனைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிச்சாறு மற்றும் கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கறி மசாலா/சிக்கன் மசாலாவை
சேர்த்து, கறிவேப்பிலை தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து, சேனைக்கிழங்கு மொறுமொறுவென்று
மாறும் வரை வதக்கி இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications
