கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kalyana Veetu Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனாலேயே உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் செய்வீர்களா? அப்படி சாம்பார் செய்யும் போது எப்போதும் ஒரே சுவையில் சாம்பார் செய்யாமல், ஒருமுறை கல்யாண வீட்டு சாம்பரை செய்யுங்கள். இந்த சாம்பாரின் ஸ்பெஷலே, அதில் ஸ்பெஷலாக தயாரித்து சேர்க்கப்படும் சாம்பார் பொடி தான். இப்படி சாம்பார் பொடி அரைத்து சாம்பார் செய்யும் போது, சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி காலையில் சாம்பார் செய்தால், நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம்.

Kalyana Veetu Sambar How To Make This Delicious Sambar Recipe

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கல்யாண வீட்டு சாம்பார் பொடிக்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1/4 கப்

பருப்பு வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 3/4 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 10
* கட்டிப் பெருங்காயம் - சிறிய துண்டு
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள்/சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 7-8 கப்
* மாங்காய் - பாதி (நறுக்கியது)
* வேக வைத்த பருப்பு
* சுடுநீர் - 2 1/2 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (3/4 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* வெல்லம் 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1/2 டீஸ்பூன்
* கல்யாண வீட்டு சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லி, வெந்தயம், சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரில் 3/4 கப் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவி, அதில் மஞ்சள் தூள், 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கட்டிப் பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதிவ் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட் சேர்த்து 2 நிமிடம் வதகக வேண்டும்.
* பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, 7-8 கப் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து காய்கறியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், மூடியைத் திறந்து அதில் பாதி மாங்காய், வேக வைத்த பருப்பு சேர்த்து கிளறி, 2 1/2 கப் சுடுநீரை ஊற்றி, பின் புளிச்சாற்றினை ஊற்றி கலந்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெல்லம், கொத்தமல்லி, நெய் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள கல்யாண வீட்டு சாம்பார் பொடியில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறி, 1 கொதி வந்ததும் இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 15, 2026, 15:34 [IST]
Desktop Bottom Promotion