Latest Updates
-
தீபாவளிக்கு சுட்ட முறுக்கு இருந்தா அதை வைச்சு இப்படி கார குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும்
கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
Kalyana Veetu Pudalangai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் மதிய வேளைகளில் எப்போதும் ஏதாவது ஒரு பொரியல் செய்வீர்களா? உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த புடலங்காயைக் கொண்டு பொரியல் செய்யுங்கள். அதுவும் கல்யாண வீட்டு ஸ்டைலில் புடலங்காய் பொரியலை செய்யுங்கள். இப்படி பொரியல் செய்யும் போது, புடலங்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த பொரியல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு புடலங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 1/2 கப் (30 நிமிடம் ஊற வைத்தது)
* புடலங்காய் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2-3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த புடலங்காய்
* அரைத்த தேங்காய்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 மூடி
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊற வைத்த கடலைப்
பருப்பை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி,
குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும்
சீரகம் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த புடலங்காயை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி,
நீரை ஓரளவு வற்ற விட வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு கிளறி,
2-3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கல்யாண வீட்டு புடலங்காய் பொரியல்
தயார்.



Click it and Unblock the Notifications
