Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் - சிம்பிளா, ஈஸியா எப்படி செய்றதுன்னு பாருங்க..
Kalyana Veetu Muttaikose Poriyal Recipe In Tamil: முட்டைக்கோஸ் என்றாலே உங்கள் வீட்டில் உள்ளோர் அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்களா? அப்படியானால் உங்களுக்கு முட்டைக்கோஸை சரியான பக்குவத்தில் செய்து கொடுக்க தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆம், முட்டைக்கோஸை சரியான பக்குவத்தில் செய்தால், முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியலை செய்து கொடுத்தால், நிச்சயம் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 சிறிய துண்டு (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (நீரில் 1/2 மணிநேரம் ஊற
வைத்தது)
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் கழுவி விட்டு, பின் அதில் நீரை
ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி, நீரில் அலசி, தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயத்தை நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, பின் நறுக்கிய
முட்டைக்கோஸையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
முட்டைக்கோஸ் வேகும் போது நீர் விடும் என்பதால், நீரை சேர்க்க வேண்டிய
அவசியம் இல்லை.
* 2 நிமிடம் கழித்து மீண்டும் கிளறி விட்டு, மூடி வைத்து 8-10 நிமிடம்
குறைமான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து முட்டைக்கோஸை கிளறி அடுப்பை
அணைத்துவிட்டு, துருவிய தேங்காயைத் தூவி கிளறினால், சுவையான கல்யாண
வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications
