Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவல் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Kalyana Veetu Karunai Kizhangu Varuval Recipe In Tamil: மதிய வேளையில் சாம்பார் சாதத்துக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கருணைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த கருணைக்கிழங்கை வழக்கமாக செய்வது போன்று வறுவல் செய்து சாப்பிடாமல், ஒருமுறை கல்யாண வீட்டு சுவையில் வறுவல் செய்து சாப்பிடுங்கள்.
இப்படி செய்யும் வறுவலானது மட்டன் சுவையில் அட்டகாசமாக இருக்கும். மேலும் இப்படி வறுவலை செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக் கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
வறுவலுக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சிறிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
அரைப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* சிறிய வெங்காயம் - பாதி (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் கருணைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் கருணைக்கிழங்கு துண்டுகளை குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீரை ஊற்றி, குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பூண்டு, சோம்பு, மிளகு, இஞ்சி, சிறிய அளவிலான
வெங்காயத்தில் பாதியை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வேக வைத்த கருணைக்கிழங்கை போட்டு, ப்ரை செய்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சிறிய தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி, 1/4
டம்ளர் நீரை ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து நன்கு
உயர் தீயில் வைத்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, மசாலா கிழங்கில் ஒட்டும் வரை நன்கு ப்ரை
செய்து இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications











