Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இட்லி, தோசைக்கு ஒருவாட்டி கையேந்தி பவன் வெங்காய சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.
Kaiyendhi Bhavan Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி தான் செய்வீர்களா? உங்கள் குடும்பத்தினர் சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா?
அவர்களுக்கு சற்று வித்தியாசமான சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வெங்காய சட்னியை செய்து கொடுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் வெங்காய சட்னியை செய்யாமல், கையேந்தி பவன் ஸ்டைலில் செய்து கொடுங்கள். இப்படி சட்னியை செய்யும் போது, அதன் சுவை வித்தியாசமாக இருப்பதால், வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

முக்கியமாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்யுமாறு கேட்பார்கள். அந்த அளவில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு கையேந்தி பவன் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 10 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், புளி சேர்த்து லேசாக வதக்கி, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியின் சூட்டில் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் சீரகம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, அதில்
தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
கையேந்தி பவன் வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











