Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
இட்லி, தோசைக்கு ஒருடைம் கையேந்தி பவன் தக்காளி கார சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாம் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க
Kaiyendhi Bhavan Tomato Kara Chutney Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளதா? எப்போதும் ஒரே சட்னியை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் சரியாக சாப்பிடுவதில்லையா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தக்காளி சட்னி ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த தக்காளி சட்னியை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கையேந்தி பவன் ஸ்டைலில் செய்யுங்கள். இப்படி சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கையேந்தி பவன் தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 10 (காரத்திற்கு ஏற்ப)
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி/புதினா - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் காரத்திற்கு தேவையான அளவு வரமிளகாயை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து, நன்கு கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கையேந்தி பவன்
தக்காளி கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
