Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கடாய் சிக்கன் கிரேவி
நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு வட இந்திய ஸ்பெஷல் ரெசிபியான கடாய் சிக்கன் கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமை வந்துவிட்டது. பலரும் என்ன சமைத்து நாவிற்கு விருந்தளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு வட இந்திய ஸ்பெஷல் ரெசிபியான கடாய் சிக்கன் கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். கடாய் சிக்கன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

இப்போது கடாய் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/4 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* நறுக்கிய குடைமிளகாய் - 3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய - 3
* பட்டை - 1 இன்ச்
செய்முறை:
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications





