Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
நாவல் பழம் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
Navalpazham Chutney Recipe In Tamil: இதுவரை எத்தனையோ சட்னியை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். பலவிதமான காய்கறிகளைக் கொண்டு வித்தியாசமான நிறைய சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் பழத்தை கொண்டு சட்னி செய்து சுவைத்துள்ளீர்களா? அதுவும் தற்போது மார்கெட்டுகளில் அதிகம் விற்கப்படும் நாவல் பழத்தைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், உடனே ட்ரை செய்து பாருங்கள்.
ஒருமுறை இந்த நாவல் பழ சட்னியை செய்தால், பின் சீசன் முடிவதற்குள் பலமுறை செய்து சாப்பிடுவீர்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும். இந்த சட்னியானது இட்லியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு நாவல் பழ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாவல் பழ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நாவல் பழம் - 20-25
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* பொடித்த வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - பாதி எலுமிச்சை அளவு
* மிளகு - 6-7
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நாவல் பழத்தின் சதைப் பகுதிகளை வெட்டி ஒரு கிண்ணத்தில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், 3 பச்சை
மிளகாய் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பாதி எலுமிச்சை அளவிலான புளியை எடுத்து, அதில் உள்ள
நார் பகுதியை நீக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் 6-7 மிளகு, 1/4 டீஸ்பூன் சீரகத் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் வெட்டி வைத்துள்ள நாவல் பழத்தை சேர்த்து
கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், சுவையான
நாவல் பழ சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
