Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
பலாப்பழத்தை வெச்சு ஒருமுறை இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அருமையா இருக்கும்..
Jackfruit Dosa Poli Recipe In Tamil: தற்போது பலாப்பழ சீசன் என்பதால் மார்கெட்டுகளில் பலாப்பழம் விலைக் குறைவில் விற்கப்படுவதைக் காணலாம். நீங்கள் பலாப்பழ பிரியர் என்றால் நிச்சயம் அடிக்கடி பலாப்பழத்தை வாங்கி சாப்பிடுவீர்கள்.
ஆனால் அப்படி வெறும் பலாப்பழத்தை சாப்பிடாமல், ஒருமுறை அதைக் கொண்டு போளி செய்து சாப்பிடுங்கள். இந்த பலாப்பழ போளி மாலை வேளையில் சாப்பிட ஏற்றவாறு அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு பலாப்பழ தோசை போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பலாப்பழ தோசை போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பலாப்பழம் - 1/4 கிலோ
* தேங்காய் - 1 மூடி
* நெய் - 1 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* உப்பு - 1 சிட்டிகை
தோசை மாவிற்கு...
* மைதா மாவு - 1 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பலாப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த பலாப்பழத்தை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப 1
சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, அதில் 1/4 டீஸ்பூன்
உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் மாவை ஊற்றி தோசை
போன்று ஊற்றி, மேலே சுற்றி எண்ணெய் ஊற்றி, குறைவான தீயில் வைத்து
முன்னும் பின்னும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதன் மேல் பலாப்பழ கலவையை வைத்து ஒரு பக்கமாக மடித்து மூடி
அழுத்தி விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால்,
சுவையான பலாப்பழ போளி தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications








