Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
Iyengar Style Pudalngai Poricha Kootu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு மற்றும் சைடிஷ் செய்து போரடித்துவிட்டதா? ஆம் எனில் சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் புடலங்காய் பொரிச்ச கூட்டை முயற்சி செய்து பாருங்கள்.

புடலங்காயை பொதுவாக பொரியல்தான் செய்வார்கள், ஆனால் ஐயங்கார் ஸ்டைலில் அதை பொரிச்ச கூட்டும் செய்யலாம். பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த புடலங்காய் பொரிச்ச கூட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அட்டகாசமான புடலங்காய் கூட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இது சாம்பார் மற்றும் ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் கூட்டு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 250 கிலோ புடலங்காய்
- 1/4 கப் பச்சைப் பயறு
- 1/2 ஸ்பூன் மஞ்சள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உப்பு
மசாலா அரைக்க:
- 1/4 கப் தேங்காய்
- 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- கால் டீஸ்பூன் பெருங்காயம்
- 3 வர மிளகாய்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- பாசிப்பருப்பை 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
- புடலங்காயைக் கழுவி, அதன் மேலுள்ள தோலைச் சுரண்டி விதைகளை அகற்றிவிட்டு, தேவைப்படும் அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு குக்கரில், ஊறவைத்த பருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- நறுக்கிய புடலங்காயை 80% வேகும் வரை ஆவியில் வேகவைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம் மற்றும் வர மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் பெருங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இதை ஆற வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அதன்பின் ஒரு வாணலியில் இந்த அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் வதக்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு, வேகவைத்த பருப்பு-காய்கறிக் கலவை மற்றும் கெட்டியான குழம்பு பதத்திற்குத் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இது பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- வேர்க்கடலை நன்றாக வறுபடும் வரை வதக்கவும். தாளித்த கலவையை கூட்டின் மீது ஊற்றி நன்கு கிளறினால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு தயார்.
- இது சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்தி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
