Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
Iyengar Style Murungakkai Kootu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு மற்றும் சைடிஷ் செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் முருங்கைக்காய் கூட்டை முயற்சி செய்து பாருங்கள்.

முருங்கைக்காயை எப்போதும் சாம்பார் அல்லது குருமாதான் வைப்போம், ஆனால் ஐயங்கார் ஸ்டைலில் அதை கூட்டும் செய்யலாம். பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த முருங்கைக்காய் கூட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அட்டகாசமான முருங்கைக்காய் கூட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இது சாம்பார் மற்றும் ரசத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ½ கப் வேகவைக்காத பாசிப்பருப்பு
- 3 முருங்கைக்காய்
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
- 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- சிறிது கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் கடுகு
அரைப்பதற்கு:
- ¼ கப் தேங்காய்
- 1 டீஸ்பூன் சீரகம்
செய்முறை:
- ½ கப் பாசிப்பருப்பைக் கழுவி, அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் மற்றும் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- முருங்கைக்காயை நன்றாகக் கழுவி விரும்பிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய், 1 டீஸ்பூன் சாம்பார் பொடி, பெருங்காயம், ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- முருங்கைக்காய் நன்றாக வேகும் வரை இதை கொதிக்கவிடவும், அதே சமயம் அது குழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
- இப்போது வேகவைத்த பருப்பை இதனுடன் சேர்க்கவும்.
- ¼ கப் தேங்காய் மற்றும் 1 டீஸ்பூன் சீரகத்தை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- இதை கடாயில் சேர்க்கவும், நன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தேவைப்பட்டால், பதத்திற்கு ஏற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும். இதை நன்றாகக் கலந்து 3-4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைக்கவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், இதை வேகவைத்தக் கூட்டில் சேர்க்கவும்.
- சுவையான ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications
