Latest Updates
-
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
Iyengar Style Coconut Milk Rasam Recipe in Tamil: ரசம் என்பது தென்னிந்தியர்களின் உணவுமுறையில் பிரிக்க முடியாத ஒரு உணவாகும். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது ரசம் இல்லாமல் முழுமையடையாது. பொதுவாக எல்லோரும் வீடுகளில் தக்காளி ரசம், மிளகு ரசம், பருப்பு ரசம் போன்றவற்றைதான் செய்வார்கள். ஆனால் புதிதாக ஏதாவது ஒரு ரசத்தை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசத்தை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் உணவுகள் என்றாலே அதற்கு தனித்துவமான சுவையும், வாசனையும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த தேங்காய்ப்பால் ரசமும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அரைச்சு விட்ட தேங்காய்ப்பால் ரசம் புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ரசம் வைக்க:
- 1 நறுக்கிய தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
- 1 கப் புளிக்கரைசல்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
-1 ஸ்பூன் உப்பு
- 2 கப் தண்ணீர்
- 1 கப் தேங்காய்ப்பால்
- 2 ஸ்பூன் கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது)
மசாலா அரைக்க:
- ½ ஸ்பூன் மிளகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 8 பூண்டு பல்
தாளிக்க:
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 2 சிட்டிகை பெருங்காயம்
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில், ஒரு பாத்திரத்தில் 1 தக்காளி, 4 மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து நன்றாகப் பிசையவும்.
- அதில் 1 கப் புளிக்கரைசல், ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தக்காளி மற்றும் மிளகாய் நன்கு மசியும் வகையில் பிசைந்து கலக்கவும்.
- இந்தக் கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும். 2 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- ஒரு மிக்சி ஜாரில் ½ ஸ்பூன் மிளகு, ½ ஸ்பூன் சீரகம் மற்றும் 8 பல் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.
- தயார் செய்த மசாலா கலவையை ரசத்தில் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
- பின்னர் 1 கப் திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- தீயைக் குறைவான அளவில் வைத்து, ரசம் கொதிக்கத் தொடங்கும் வரை சூடாக்கவும்.
- தேங்காய்ப்பால் திரிந்துபோக வாய்ப்புள்ளதால், அதிகமாக கொதிக்கவிடக்கூடாது.
- ரசத்தைத் தாளிக்க ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம், 2 காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு நன்கு பொரிந்ததும், அதை ரசத்தின் மீது ஊற்றவும். மேலும், 2 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் மணமணக்கும் ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெடி!



Click it and Unblock the Notifications
