Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அதை தூக்கிப் போடாம.. இப்படி இட்லியை செய்யுங்க...
Instant Idli Using Leftover Rice: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? இட்லி, தோசை செய்யலாம் என்றால், அதற்கு கூட மாவு அரைக்க மறந்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் நேற்று சமைத்த சாதம் மீந்துள்ளதா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் 5 நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம் தெரியுமா?
தற்போது அரிசி விற்கும் விலைக்கு பழைய சாதத்தை தூக்கி போடவே மனசு வருவதில்லை. எப்படியாவது அதை வேறு வழியில் சாப்பிட முடியாத என்று பலரும் யோசிக்கலாம். எனவே உங்களுக்காக மீந்து போன சாதத்தைக் கொண்டு எப்படி சுட சுட பஞ்சுப் போன்ற இட்லியை செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த இட்லி வழக்கமாக நாம் செய்யும் இட்லியை விட மிகவும் மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும். முக்கியமாக 5 நிமிடத்தில் இதை செய்துவிடலாம்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி இட்லி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய இஸ்டன்ட் இட்லியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* ரவை - 1/4 கப்
* தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மீந்து போன சாதத்தை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தயிரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையான அளவு உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். (முக்கியமாக மாவை அரைத்த பின்
இட்லி சுடுவதாக இருந்தால், நீரை அதிகம் ஊற்ற வேண்டாம். இல்லாவிட்டால்
இட்லி தட்டையாக இருக்கும்.)
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை
நன்கு கொதிக்க விட வேண்டும்.
* அதே சமயம் இட்லி தட்டில், அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி,
இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து
எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற இட்லி தயார்.
குறிப்பு:
* இந்த மாவைக் கொண்டு வேண்டுமானால் தோசையையும் சுடலாம். இந்த
மாவில் தோசையை சுட்டு சாப்பிட்டால், நன்கு டேஸ்ட்டாக இருக்கும்.
* முக்கியமாக இந்த இட்லியை செய்த பின், சற்று ஆற வைத்து
சாப்பிடுங்கள். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
