Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
1 இன்ச் இஞ்சியும், 2 பச்சை மிளகாயும் வெச்சு.. இப்படி ஒருடைம் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Inji Pachai Milagai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அப்படி இட்லி, தோசை சுடும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? இப்படி எப்போதும் ஒரே சுவையில் சட்னி செய்து போரடித்துவிட்டதா?
உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான சட்னியை செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் இஞ்சியும், பச்சை மிளகாயும் இருந்தால், அவற்றைக் கொண்டு இஞ்சி பச்சை மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த சட்னியை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டு வந்தால், அஜீரண பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

உங்களுக்கு இஞ்சி பச்சை மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி பச்சை மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புதினா - 20 இலைகள்
* கொத்தமல்லி- சிறிது
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பூண்டு - 4 பல்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை,
புதினா, சற்று அதிகமாக கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி
இறக்கி, புளியை சேர்த்து வதக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கியதை சேர்த்து, அத்துடன் பூண்டு,
பொட்டுக்கடலை, வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும்
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
இஞ்சி பச்சை மிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
