Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
சுவையான... மக்ரோனி பாஸ்தா
உங்களுக்கு பாஸ்தா சரியாக செய்யத் தெரியாதா? அப்படியானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான மக்ரோனி பாஸ்தாவை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் ரொம்ப பிடிக்குமா? உங்களுக்கு பாஸ்தா சரியாக செய்யத் தெரியாதா? அப்படியானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான மக்ரோனி பாஸ்தாவை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். பாஸ்தா ஒரு சிறப்பான காலை உணவு மட்டுமின்றி, இரவு உணவும் கூட. நீங்கள் 10 நிமிடத்தில் ஒரு ருசியான மக்ரோனி பாஸ்தா செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள்.

இது ஒரு இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா. இப்போது இந்த மக்ரோனி பாஸ்தாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைக்கு எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மக்ரோனி பாஸ்தா - 1 கப்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
* நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
* நறுக்கிய தக்காளி - 1/2 கப்
* நறுக்கிய குடைமிளகாய் - 1/4 கப்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சீஸ் - சிறிது (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலாப் பொடிகள்:
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கறி மசாலா பொடி - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* பிட்சா சீசனிங் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் பாஸ்தாவைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் குடைளிமகாய் சேர்த்து, கறி மசாலா, கரம் மசாலா, மிளகாய் பொடியையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு வதக்கி விட வேண்டும்.
* அடுத்து பிட்சா சீசனிங் மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து, அத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இறுதியில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒருசேர பிரட்டி விட்டு இறக்கி, மேலே துருவிய சீஸைத் தூவினால், சுவையான மக்ரோனி பாஸ்தா தயார்..!



Click it and Unblock the Notifications
