Latest Updates
-
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன்.
Chef Deena's Idly Milagai Podi In Tamil: இட்லி, தோசைக்கு என்ன தான் சட்னி, சாம்பார் செய்தாலும், சிலர் அத்துடன் இட்லி பொடியையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இட்லி பொடியை ஒரு பாட்டிலில் அரைத்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த இட்லி பொடியை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் செய்வார்கள்.

உங்கள் வீட்டிலும் எப்போதும் ஒரே சுவையில் தான் இட்லி பொடியை செய்வீர்களா? இப்படி செய்து உங்களுக்கு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை செஃப் தீனா ஸ்டைலில் இட்லி பொடியை செய்யுங்கள். இந்த இட்லி பொடியின் ஸ்பெஷலே அதில் கடைசியாக செஃப் சேர்க்கும் ஒரு பொருள் தான். இது அந்த இட்லி பொடியின் சுவையையே தனித்து காட்டும்.
இந்த இட்லி மிளகாய் பொடியை செஃப் தீனா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு அந்த இட்லி மிளகாய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த இட்லி மிளகாய் பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
* காய்ந்த கறிவேப்பிலை - தேவையான இளவு
* வெள்ளை எள்ளு - 2 ஸ்பூன்
* வரமிளகாய் - 12-15
* பூண்டு - 10-15 பல்
* பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
* நாட்டுச்சர்க்கரை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பை
சேர்த்து, குறைவான தீயில் வைத்து லேசாக பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், 2 ஸ்பூன் கடலைப் பருப்பை சேர்த்து, குறைவான தீயில் வைத்து
அதையும் பொன்னிறமாக ப்ரை செய்து, தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் எள்ளு விதைகளை சேர்த்து, குறைவான தீயில்
வைத்து பொன்னிறமாக ப்ரை செய்து, அதையும் தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பூண்டு பற்களை தோலுடன் இடித்து சேர்த்து,
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு
வறுத்து, அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன்
பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஓரளவு
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் 1/2 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து அரைத்தால்,
அருமையான இட்லி மிளகாய் பொடி தயார்.



Click it and Unblock the Notifications
