Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
இட்லி பொடியை ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. வீட்டுல சட்னி, சாம்பார் கேட்கவே மாட்டாங்க..
Idli Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதுமே இட்லி பொடி இருக்குமா? என்ன தான் இட்லி பொடி இருந்தாலும், உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னி, சாம்பார் கேட்பார்களா? சொல்லப்போனால் இட்லி பொடியை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் இட்லி பொடியை ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்யுங்கள்.
அதுவும் இட்லி பொடிக்கு சாதாரண வெள்ளை உளுந்தை பயன்படுத்தாமல், கருப்பு உளுந்தை பயன்படுத்தும் போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். முக்கியமாக இப்படி இட்லி பொடியை செய்யும் போது, சுவை பிரமாதமாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இப்படி இட்லி பொடியை செய்தால், இட்லி பொடி பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த மாதிரி இட்லி பொடியை செய்தால், ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இட்லி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்
* கடலைப் பருப்பு - 1 கப்
* வெள்ளை எள்ளு விதைகள் - 1/2 கப்
* எண்ணெய் - 1/2 ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 25
* காஷ்மீரி வரமிளகாய் - 7
* பூண்டு - 8 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் கருப்பு
உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் கடலைப் பருப்பை சேர்த்து, அதையும் லேசாக
நிறம் மாற வறுத்து தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் மீண்டும் அதே வாணலியில் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து அதையும்
வறுத்து தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1
கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வறுத்து, எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
வரமிளகாய், நிறத்திற்காக காஷ்மீரி வரமிளகாய், பெருங்காயத் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்கள் அனைத்தையும்
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பொடியானது நன்கு குளிர்ந்த பின், காற்றுப் புகாத டப்பாவில் போட்டு
பயன்படுத்தினால், சுவையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.



Click it and Unblock the Notifications











