For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை இலைக்காய்கறி கீரை வகைகளை எப்படி கழுவ வேண்டும்?

By Maha
|

How to Clean Greens
கீரை வகைகள் என்று சொல்லும் போது பசுமையான பலவகை கீரைகளோடு, பச்சை இலைக்காய்கறி வகைகளைச் சேர்ந்த லெட்யூஸ், முட்டைக்கோஸ் போன்றவையும் இவற்றில் அடங்குகின்றன. இத்தகைய கீரைகளில் பலவித பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் ஒட்டிக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த இரசாயனங்கள் உடலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பது தெரியும்.

அதேசமயம், இந்த கீரை வகைகள் ஆர்கானிக் முறையில் பயிராக்கப்பட்டிருந்தாலும் கூட அவற்றில் மண், அழுக்கு மற்றும் பல மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட கிருமிகளும் கூட ஒட்டிக் கொண்டிருக்கலாம். எனவே அவற்றை மிகக் கவனமாக கழுவுவது அவசியம். அதிலும் கிச்சன் சிங்க்கில் நிறைய நீர் விட்டு கழுவுவது தான் மிகவும் சுலபமான வழி. இப்போது அந்த கிச்சன் சிங்க்கில் வைத்து எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்று பார்ப்போமா!!!

1. முதலில் கிச்சன் சிங்க்கை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். ஏனெனில் விளிம்புகளில் ஏதும் சோப்புத் துண்டுகள், பழைய உணவுத் துகள்கள் அல்லது அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.

2. சிங்க்கில் நீரை நிரப்பும் முன், சிங்க்கின் துவாரத்தை அடைக்க வேண்டும்.

3. ஒருவேளை லெட்யூஸ் காய்கறியிலிருந்து கீரைப் பகுதியை சுலபமாக பிரித்தெடுக்க வேண்டுமென்றால், கீரைப் பகுதியை நன்கு சேர்த்துப் பிடித்தப்படி மேடையில் இரண்டு தட்டு தட்டினால் தண்டுப்பகுதி பெயர்த்துக்கொண்டு வந்துவிடும். பின் இலைகளை தனித்தனியே பிரித்து சிங்க்கில் போட வேண்டும். சிறிய இலைகளை எளிதாக விரல்களால் கிள்ளி எடுத்துவிடலாம். பெரிய இலைகளை மடக்கி ஒடிக்க வேண்டும். தண்டுப்பகுதி மற்றும் தடிமனான காம்புப்பகுதியை எறிந்துவிடலாம்.

4. இப்போது சிங்க்கில் குளிர்ந்த நீரை நிரப்புங்கள்.

5. இலைகளை கலக்கி விட்டு ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிந்திருக்கும்படி புரட்டி விடுங்கள். இலைகளானது ஒட்டிக் கொண்டிருக்காமல், அவை நன்கு நீரில் மூழ்கியிருக்க வேண்டும்.

6. ஒரு இரண்டு நிமிடங்களுக்கு கீரை இலைகள் அப்படியே இருக்கட்டும். அப்போது தான் அவற்றில் இருக்கும் மண், அழுக்கு போன்றவை சிங்க் அடியில் படியும்.

7. இப்போது ஒவ்வொரு இலைகளாக எடுங்கள். எடுக்கும் போது மண் இருப்பது போல் தெரிந்தால், லேசாக நீரில் அலசலாம் அல்லது மற்றொரு சிங்க் இருந்தால் அதில் அலசலாம். அவ்வாறு அலசும் போது, நீரின் அடியில் தங்கியிருக்கும் அழுக்கு, மண் போன்றவை கலந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. பின் இலைகளை ஒரு சல்லடைப் பாத்திரத்தில் போடவும். பாத்திரத்தை நீர் வடிவதற்காக சிங்க்கிலேயே வைப்பதாக இருந்தால் சிங்க் அடியில் தங்கிருந்த அழுக்குமண் போன்றவற்றை சுத்தமாக வடிய வைத்து விடவும். மேலும் கீரையில் உள்ள நீரை எடுப்பதற்கு ஒரு 3X3 அடி காட்டன் மஸ்லின் துணியில் கீரைகளை வைத்து துணியின் நான்கு முனைகளையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு வட்டமாக சுழற்றவும். (வெளியில் சென்று இதை செய்வது நல்லது). இப்போது துணியை பிரித்து ஒரு அகண்ட டிரேயில் வைத்தால் அது இன்னமும் உலரக்கூடும். ‘சாலட் ஸ்பின்னர்' என்னும் கருவியும் கீரை உலர வைப்பதற்காக இப்போது கிடைக்கிறது. இருந்தாலும் மஸ்லின் துணி தான் சிறந்தது. உலர்ந்த கீரையானது சாலட் தயாரிப்புக்கு அவசியமான ஒன்று. அப்போது தான் டிரஸ்ஸிங் கலவை நீர்த்துப் போகாமல் இருக்கும். அதுமட்டுமல்ல, சாலட்டை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது கீரை அழுகிப்போய் விடாமலும் இருக்கும்.

குறிப்புகள்:

• கீரைகளில் பூச்சிகள் இருப்பது போல் தெரிந்தால் அதிக நேரம் நீரில் முக்கியிருப்பது நல்லது. கொஞ்சம் சூடான நீரைப் பயன்படுத்துவது இன்னும் எளிதில் பூச்சிகளை உதிர வைக்கும்.

• ஒரு சிட்டிகை உப்பையும் நீரில் சேர்த்துக் கொள்வது நல்லது.

• கீரையை கழுவும் போது, கொஞ்சம் கொஞ்சமாகவும் கழுவுவது சிறந்தது.

• சிங்க் வசதியாக இல்லாவிட்டால் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

• எந்த ஒரு கீரையையும் இப்படி கழுவினால் நல்லது.

எச்சரிக்கைகள்:

1. லெட்யூஸ் இலைகளைக் கழுவும் போது மென்மையாக கையாள்வது அவசியம். இல்லையேல் சுருங்கி வாடிப்போன இலைகளே மிஞ்சும்.

2. கழுவப்பட்டவை என்றே சில கீரைகள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அத்தகைய கீரைகளையும் கழுவி உபயோகிப்பது நல்லது.

3. டர்னிப், கடுகுக் கீரை மற்றும் கோல்லார்ட் போன்ற மணற்கீரை வகைகளை எப்படியும் வேக வைக்கப் போவதால், கிருமி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

English summary

How to Clean Greens | பச்சை இலைக்காய்கறி கீரை வகைகளை எப்படி கழுவ வேண்டும்?

"Greens" is just a nice, quick way of saying green, leafy vegetables. These are veggies like lettuce,cabbage, and spinach. And the easiest way to clean greens is with a lot of water in the sink.
Story first published: Thursday, January 3, 2013, 12:21 [IST]
Desktop Bottom Promotion