Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ரம்ஜானுக்கு இந்த ஹைதராபாத் பிரியாணியை செஞ்சு அசத்துங்க.. இதோ ரெசிபி..!
ரம்ஜான் பண்டிகையன்று செய்யும் பிரியாணி சற்று வித்தியாசமாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! இல்லையென்றால் எந்தவித சுவாரஸ்யமும் இருக்காது. ஆக, இந்த பண்டிகையை குதூகலம் மிகுந்ததாக மாற்றுவதற்கு நீங்கள் ஹைதரபாத் பிரியாணிய உங்கள் வீட்டில் செஞ்சு அசத்துங்க...
பெரும்பாலும் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே சாப்பிட்டு பழகிய இந்த வெரைட்டியை வீட்டில் செய்வது ரொம்பவும் கடினமல்ல. எளிமையான டிப்ஸ், பக்குவமான செய்முறை ஆகியவற்றை பின்பற்றினால் நம் வீட்டிலும் கூட ஹைதராபாத் பிரியாணி கமகமவென்று மணக்கும். இப்போது ஹைதராபாத் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி - 2 கப்
மட்டன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பப்பாளி - 1 சிறிய துண்டு (நைசாக அரைத்து கொள்ளவும்)
தயிர் - ½ கப்
மிளகாய்த்தூள் - 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா - ½ மேஜைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3
புதினா - 1 கைப்பிடி அளவு
எலுமிச்சம் பழ சாறு - 1 மேஜைக்கரண்டி
ஜாதிக்காய்த்தூள் - ¼ மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
பால் - 2 மேஜைக்கரண்டி
முந்திரி - 7
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. முதலில் வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய்களை இரண்டாக கீறி கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியளவு எடுத்து அரைத்து கொள்ளவும். மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் அரைத்த மசாலா பொடிகள், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, அரை மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், புதினா, 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பின்னர் பிரியாணி அரிசியைக் நன்றாக கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அரைத்தது போக மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசியை முக்கால் பதம் வேக வைத்து வடித்து எடுத்து கொள்ளவும்.
3. பின்னர் வெங்காயத்தை பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் மசாலாக்கள் சேர்த்து ஊறவைத்த மட்டனை அப்படியே அதனுடன் கொட்டி வதக்கவும்.
4. நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டனை நன்றாக வேக வைக்க வேண்டும். மட்டன் நன்றாக வெந்ததும், அதில் வேகவைத்து வடித்த சாதம், வதக்கிய வெங்காயம், புதினா, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும்.
5. பின்னர் 20 நிமிடம் கழித்து முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாறினால் சூப்பரான, மற்றும் சுவையான ஹைதராபாத் மட்டன் பிரியாணி தயார்...
6. பரிமாறும்போது மசாலாவும், சோறும் கலந்து வரும்படி எடுக்கவும்.



Click it and Unblock the Notifications