Latest Updates
-
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! -
திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க.. -
30 வருடம் கழித்து மேஷம் செல்லும் சனி: 2027-ல் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடும் 3 ராசிக்காரங்க இவங்கதான்! -
சுரைக்காய் இருந்தா இப்படி ஒரு பொடி அரைச்சு கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் ஜூஸ் - இவை உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? டாக்டர் பதில் இதோ! -
சந்திர-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்..
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா?
Beetroot Konda Kadale Chapati With Garlic Green Chilli Dip Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்து சாப்பிடுவீர்களா? எப்போதும் ஒரே மாதிரி ப்ளைன் சப்பாத்தி தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை பீட்ரூட் மற்றும் கருப்பு கொண்டைக்கடலை கொண்டு சப்பாத்தி செய்யுங்கள். இந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது. இருப்பினும் இதற்கு பூண்டு பச்சை மிளகாய் டிப் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இந்த காம்போ சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.

உங்களுக்கு இந்த பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தி மற்றும் கார்லிக் டிப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கருப்பு கொண்டைக்கடலை - 150 கிராம் (2 மணிநேரம் ஊற வைத்தது)
* பீட்ரூட் - 150 கிராம் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிது
* தண்ணீர் - 2 டம்ளர்
பிற பொருட்கள்...
* கொத்தமல்லி - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கோதுமை மாவு - 1 கப்
* தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கார்லிக் க்ரீன் சில்லி டிப்பிற்கு...
* கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன் + 50 மிலி
செய்முறை:
* முதலில் கருப்பு கொண்டைக்கடலையை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலை, பீட்ரூட், நறுக்கிய
வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து, 2 டம்ளர் நீரை ஊற்றி, குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி, வேக
வைத்ததை ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது
கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள்,
சீரகத் தூள், ஓமம், சுவைக்கேற்ப உப்பு, கோதுமை மாவு சேர்த்து நன்கு
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தயிரை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். இதன் மூலம்
சப்பாத்தி மென்மையாக இருக்கும். மாவை நன்கு பிசைந்த பின் மூடி வைத்து
10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டி, சப்பாத்தியாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, நெய் ஊப்பு
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பீட்ரூட் கருப்பு
கொண்டைக்கடலை சப்பாத்தி தயார்.
* அடுத்து இதற்கு சைடு டிஷ்ஷாக டிப் செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து வறுத்து இறக்கி,
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை
மிளகாயை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கடுகு
பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து
கிளறி நன்கு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, அதில் 50 மிலி அடித்து வைத்துள்ள
தயிரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூண்டு பச்சை மிளகாய் டிப்
தயார்.



Click it and Unblock the Notifications
