Latest Updates
-
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
டயட்ல இருந்தா.. ஓட்ஸை இப்படி செஞ்சு தினமும் 1 கப் சாப்பிடுங்க.. உடல் எடை வேகமா குறையும்.. டேஸ்டியும் கூட..
Veg Masala Oats Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? அதற்காக தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிடுகிறீர்களா? அதுவும் உப்புசப்பு இல்லாமல் ஓட்ஸை சாப்பிடுவீர்களா? அப்படியானால் இனிமேல் அப்படி சாப்பிடாமல், ஓட்ஸைக் கொண்டு அசத்தலான சுவையில் ஒரு டிபனை செய்யுங்கள். அதுவும் காய்கறிகளை சேர்த்து மசாலா ஓட்ஸ் செய்யுங்கள்.
இந்த வெஜ் மசாலா ஓட்ஸை தினமும் காலையில் 1 கப் சாப்பிட்டால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம் மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இந்த ஓட்ஸ் ரெசிபியின் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

உங்களுக்கு வெஜ் மசாலா ஓட்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் மசாலா ஓட்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப் (காய்கறி வேக வைப்பதற்கு)
* ஓட்ஸ் - 2 கப்
* தண்ணீர் - 2 கப் (ஓட்ஸிற்கு)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி, கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, பின் 1/2 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து காய்கறிகளை வேக வைக்க
வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் ஓட்ஸை சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி பிரட்டி,
மூடி வைத்து, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறி இறக்கினால், சுவையான வெஜ் மசாலா ஓட்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications
