Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
புரட்டாசி ஏகாதசி 2024.. பெருமாளுக்கு இதை நைய்வேதியம் செய்யுங்கள்..!
புரட்டாசி சனிக்கிழமைகள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது.. நாளை புரட்டாசி 2வது சனிக்கிழமை.. அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது நல்லது... புரட்டாசி சனிக்கிழமைக்கு அப்படி என்ன சிறப்பு என நினைக்கிறீர்களா? சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் இந்த புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகம்..
புரட்டாசி சனிக்கிழமைகளில் தளிகை அல்லது படையல் இட்டு வழிபடும் முறை உண்டு. முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் படையல் போடுவார்கள்.. புரட்டாசியின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மஹாளய பட்சம் நடக்கும் காலமாகும்... அதனால் அந்த நாட்களில் தளிகை போடமாட்டார்கள்.. அதற்கு பதிலாக பெருமாளுக்கு இந்த இனிப்பை நைவேத்தியமாக செய்து படையுங்கள்.. பாசி பருப்பு பாயாசத்தை நைவேத்தியமாக செய்து இலையில் வைத்து படையுங்கள்.. இந்த பாசி பருப்பு பாயாசத்தை செய்வது எப்படி? இதை செய்ய தேவையான பொருட்கள் என்னன்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - கால் கப்
செய்முறை
1. பாசி பருப்பை கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும். பச்சரிசியை மைய கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை உருக்கிக் கொள்ளுங்கள்.
2. இபோது பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
3. இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் தயார்.
4.இந்த பாசி பருப்பு பாயசத்தை கண்டிப்பாக குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைஇவரும் விரும்பி சப்பிடுவார்கள்..
பாசி பருப்பின் நன்மைகள்
பாசி பருப்புகள் பொதுவாகவே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications