Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
மொறு மொறுன்னு முருங்கை கீரை தோசை செய்ய தெரியுமா?
Murungai keerai dosai: முருங்கைக்கீரையில் பொரியல் செஞ்சு சாப்பிட்டுருப்பீங்க, குழம்பு செஞ்சு சாப்பிட்டுருப்பீங்கள், ஏன் முருங்கிகீரையில் துவையல் கூட சொஞ்சுருப்பீங்கள்.. ஆனால் முருங்கைக்கீரையில் தோசை செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? செம்மையா இருக்கும்.. ருசி சும்மா வேற லெவல்ல இருக்கும்.. இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ட்ரை பண்ணி பாருங்க..
முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் முருங்கைக் கீரையில் மற்ற காய்கறிகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இப்படி இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் முருங்கைகீரையை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் கொடுக்க உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.. இதனால் அவர்கள் எளிதில் நோய்வாய்ப்பட மாட்டார்கள்.. ஆரோக்கியமாக இருப்பார்கள்..

முருங்கைக்கீரை தோசை செய்ய தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை பேஸ்ட் செய்வதற்கு,
எண்ணெய்-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
பூண்டு-2
சின்ன வெங்காயம்-3
பச்சை மிளகாய் -2
முருங்கைக்கீரை-1 கைப்பிடி.
மாவிற்கு,
ரவா-1கப்.
அரிசி மாவு-1 கப்.
மைதா மாவு- 3 தேக்கரண்டி.
பெரிய வெங்காயம்-2
கருவேப்பிலை-சிறிதளவு.
கொத்தமல்லி- சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
முந்திரி-5
சீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
உப்பு- தேவையான அளவு.
நெய்-தேவையான அளவு.
முருங்கைக்கீரை தோசை செய்யும் செய்முறை
1. முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி சீரகம் 1 ஸ்பீன், பூண்டு 2, சின்ன வெங்காயம் 3, பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கிவிட்டு சுத்தம் செய்துவைத்த முருங்கைக்கீரை 1 கைப்பிடி சேர்த்து நன்றாக வதக்கவும். .
2. இப்போது இதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 1 கப் ரவா, 1 கப் அரிசி மாவு, 3 ஸ்பூன் மைதா, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு, பச்சைமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு,கொத்தமல்லி சிறிதளவு, பொடியாக நறுக்கிய முந்திரி 5, மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேணுட்ம்
3. அதில் அரைத்த முருங்கைக்கீரை பேஸ்டை சேர்த்து 5 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவிட்டு 20 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
4. தோசைக்கல் சூடானதும் நெய் தடவி தோசை மாவை ஊற்றி மொறு மொறுவென்று எடுத்தால் சுவையான முருங்கைக்கீரை தோசை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை உங்க வீட்டில் ட்ரை பண்ணிப் பாருங்க..
5. இந்த சத்து நிறைந்த சுவையான முருங்கை கீரை தோசையை நீங்கள் தேங்காய் சட்னி, சாம்பார், கார சட்னி, தக்காளி வெங்காய சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
முருங்கைக்கீரையின் நன்மைகள்
1. முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.
2. முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
3. முருங்கை கீரை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.
4. தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
5. முருங்கை கீரையை அடிக்கடி நமது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.



Click it and Unblock the Notifications












