Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
Hotel Style Makhana Gravy Recipe In Tamil: இதுவரை சப்பாத்திக்கு நீங்கள் எத்தனையோ சைடு டிஷ் செய்திருப்பீர்கள். ஆனால் தாமரை விதை கொண்டு கிரேவி செய்துள்ளீர்களா? தாமரை விதையில் கிரேவியா என்று பலரும் யோசிக்கலாம். சிலருக்கு தாமரை விதை என்றால் என்னவென்று கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதை பார்த்திருப்பீர்கள். அது தான் மக்கானா. இந்த மக்கானாவை இன்னும் நிறைய பேருக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும். சொல்லப்போனால் மக்கானாவை சாப்பிடும் பலர் அதை ஸ்நாக்ஸ் போன்று தான் சாப்பிட்டிருப்பார்கள்.

ஆனால் அந்த மக்கானாவைக் கொண்டு சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவியை சப்பாத்திக்கு செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக மக்கானா என்னும் தாமரை விதை உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு அருமையான உணவுப் பொருள். இதில் கலோரிகள் இல்லை என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* முந்திரி - 6
* ஏலக்காய் - 2
* பட்டை - 2
* கிராம்பு - 2
* தயிர் - 1/4 கப்
வறுப்பதற்கு..
* நெய் - 2 டீஸ்பூன்
* மக்கானா/தாமரை விதை - 2 கப்
கிரேவி தாளிப்பதற்கு..
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* அரைத்த விழுது
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த மக்கானா
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் முந்திரி, ஏலக்காய், பட்டை, கிராம்பு
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
மக்கானாவை சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து தனியாக
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம்,
சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளி விழுது மற்றும் முந்திரி விழுதை
சேர்த்து நன்கு தக்காளியின் பச்சை வாசனை போக வதக்கி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து, 10 நிமிடம் எண்ணெய் பிரியும்
வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் வறுத்த மக்கானா மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
