Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஹரியாலி முட்டை கிரேவி
ஹரியாலி முட்டை கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் முட்டை கிரேவி ஆகும். இந்த முட்டை கிரேவி சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஹரியாலி முட்டை கிரேவி என்பது கொத்தமல்லி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் முட்டை கிரேவி ஆகும். இந்த முட்டை கிரேவி சப்பாத்தி, நாண், புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு திடீரென்று சப்பாத்தி மற்றும் முட்டை கிரேவி கேட்டால், ஹரியாலி முட்டை கிரேவியை செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள். இதனால் நீங்கள் வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்களுக்கு ஹரியாலி முட்டை கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹரியாலி முட்டை கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4 (வேக வைத்தது)
* பட்டை - 1 இன்ச்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
ஹரியாலி மசாலாவிற்கு...
* கொத்தமல்லி - 2 கப் (நறுக்கியது)
* புதினா - 1 கப் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வெங்காய மசாலாவிற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஹரியாலி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அரை கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சிறிய மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து தாளித்து, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 4-5 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் ஹரியாலி மசாலா மற்றும் பிரஷ் க்ரீம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஹரியாலி முட்டை கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications





