Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
1 கப் பச்சை பட்டாணி இருந்தா இந்த மாதிரி சூப் வைச்சு குடிங்க..டேஸ்ட்டாவும் இருக்கும், எடையும் வேகமாக குறையும்..
Green Peas Soup Recipe in Tamil: தற்போது மாறி வரும் பருவநிலை காரணமாக குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பலர் இதன் காரணமாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் குடிப்பது, பூண்டு மிளகு சேர்த்து ரசம் சாப்பிடுவது என பலவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள துவங்கி இருப்பார்கள். உங்கள் வீட்டிலும் சிலர் சளி, இருமலால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சூப் செய்து கொடுங்கள்.
முக்கியமாக உங்கள் வீட்டில் பச்சைப் பட்டாணி இருந்தால், அதை வைத்து சூப் செய்யுங்கள். இந்த பச்சைப் பட்டாணி சூப் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த சூப் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான புரோட்டினையும் வழங்குகிறது.

உங்களுக்கு பச்சைப் பட்டாணி சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சைப் பட்டாணி சூப்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சைப் பட்டாணி - 1 கப் அல்லது 150 கிராம்
- உருளைக்கிழங்கு - 2
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி - சிறிதளவு
- பூண்டு - 2 பல்
- எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
- வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி மற்றும் மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் 300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் பட்டாணியை வேகவிடவும்.
- பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்கு கடையவும் அல்லது மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
- அரைத்த காய்கறி விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டவும்.
- அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- மீதமுள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிடவும்.
- அவ்வளவுதான் சத்தான மற்றும் ஆரோக்கியமான பச்சைப் பட்டாணி சூப் ரெடி!



Click it and Unblock the Notifications