Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும்
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Green Moong Dal Dosa With Kara Chutney Recipe In Tamil: காலையில் ஒரே மாதிரியான டிபனை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் பிள்ளைகளுக்கு புரோட்டீன் நிறைந்த காலை உணவை கொடுக்க நினைத்தால், பச்சை பயறு தோசை செய்து கொடுங்கள். இந்த தோசைக்கு கார சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த காம்பினேஷன் டிபனை செய்தால், பின் அடிக்கடி இதை செய்வீர்கள். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த டிபன் ஏற்றது.

உங்களுக்கு பச்சை பயறு பச்சை பயறு தோசையும், கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு தோசையும், கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு தோசைக்கு...
* பச்சை பயறு - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* அவல் - 1/4 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
கார சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 7
* முழு பூண்டு - 3
* தக்காளி - 1/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த சட்னி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு மற்றும் உளுத்தம் பருப்பை
எடுத்து, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 5 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* பின் அவலை 1/2 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த பருப்புக்களை சேர்த்து, அத்துடன்
அவலையும் கழுவி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு, மூடி வைத்து
குறைந்தது 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து மூடியைத் திறந்து, மாவை நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாளை சேர்த்து ப்ரை
செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 முழு பல் பூண்டை சேர்த்து, நன்கு வதக்க வேண்ம்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளி, சுவைக்கேறப் உப்பு சேர்த்து, சிறது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள கேடண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
அரைத்த சட்னியை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான கார சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி சூடானால், சுவையான
பச்சை பயறு தோசை யார்.



Click it and Unblock the Notifications