Latest Updates
-
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?
பச்சை மிளகாயை வைச்சு மும்பை ஸ்டைல் தேச்சா செய்யுங்க... சாதத்துல போட்டு சாப்பிட காரமா டேஸ்ட் சூப்பரா இருக்கும்!
Green Chilli Thecha Recipe in Tamil: சிலருக்கு உணவில் காரம் அதிகமாக சாப்பிடுவது பிடிக்கும். காரம் சற்று குறைவாக இருந்தால் உணவில் சுவை குறைவாக இருப்பதாக நினைப்பார்கள். காரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவார்கள். இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் பச்சை மிளகாயை நேரடியாக உணவுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். சிலர் பச்சை மிளகாயை இரண்டாக கீறி அதில் உப்பு சேர்த்து வதக்கி சாப்பிடுவார்கள்.
சிலர் மோரில் சேர்த்து மோர் மிளகாய், புளி சேர்த்து புளி மிளகாய் என பலவற்றை செய்திருப்பார்கள். சட்டினியில் கூட சேர்த்து சற்று காரம் தூக்கலாக சாப்பிடுவார்கள். ஆனால், பச்சை மிளகாயை முக்கிய பொருளாக வைத்து எப்படி மகாராஷ்டிரா பாணியில் பச்சை மிளகாய் தேச்சா செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் - 20
- பூண்டு - 15 பல்
- நிலக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- தேங்காய் - ½ மூடி
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கடாயை அடுப்பில் வைத்து பச்சை நிலக்கடலையை கருகாமல் நன்றாக
வறுத்து ஆற விடவும்.
அல்லது கடைகளில் கிடைக்கும் வறுத்த நிலக்கடலையை வாங்கியும்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
எடுத்து வைத்து கொள்ளவும்.
- பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பொரிந்ததும் பச்சை மிளகாயை சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக
வறுக்கவும்.
- பின் அதனுடன் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வறுத்த வைத்த நிலக்கடலையை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
- நிலக்கடலையை மிளகாயுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- கடைசியாக உப்பு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
- இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து 2 பல்ஸ் விட்டு
கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- சுவையான பச்சை மிளகாய் தேச்சா ரெடி!
- இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications

