Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள தோல்வி துரத்தப்போகுதாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 25 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
June 2026 Horoscope: ஜூன் மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கோடீஸ்வர யோகத்தை பெறும் 3 ராசிகள் -
குடைமிளகாயை வைச்சு இப்படி வித்தியாசமா குருமா செய்யுங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
சப்பாத்தி, பூரிக்கு இப்படி குருமா செய்யுங்க.. வழக்கமா சாப்பிடுறத விட எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
9 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் டீத்தூள் - இந்த டீத்தூள் எந்த நாட்டில் விளைகிறது? இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா? -
வெயிலால் வீட்டில் அடிக்கடி சண்டையா? உங்கள் கோபத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த உண்மை தெரியுமா? -
நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்த குழந்தைங்கள் அவங்க பெற்றோரை கோடீஸ்வரராக்கப் பிறந்தவர்களாம் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் எது-ன்னு சொல்லுங்க.. உங்களோட குணத்தை சொல்றோம்.. -
வெயில் கொடுமையால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் மாத்துங்க, உறவு இனிக்கும்!
3/4 கப் கோதுமை ரவை இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Gothumai Rava Kichadi Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் எப்பவும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான டிபனை செய்து தர சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிச்சடி செய்யுங்கள்.

அதுவும் இந்த கிச்சடிக்கு கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்க்கும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் சத்தானதும் கூட. முக்கியமாக நெய் சேர்த்து செய்வதனால், சுவை வேற லெவலில் இருக்கும். இந்த கோதுமை ரவை கிச்சடியை ஒரு கப் சாப்பிட்டாலே, நாள் முழுவதும் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.
இந்த கோதுமை ரவா கிச்சடி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கோதுமை ரவா கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 3/4 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (தட்டியது)
* இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 1/4 கப் (10 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 4 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை
சேர்த்து நல்ல மணம் வந்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு
தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு
மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை கழுவி சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து
நன்கு 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சாம்பார்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் 4 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி
மற்றும் நெய் ஊற்றி நன்கு கிளறி விட்டால், சுவையான கோதுமை ரவா கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications