Latest Updates
-
நவம்பர் 12, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் நாளாக இருக்குமாம் -
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
செவ்வாய் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
கத்திரிக்காயை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
வரகரிசியில் இப்படி தக்காளி சாதம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பர்ப்யூம் அடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா? அடுத்தமுறை இந்த தவறை செய்யாதீங்க -
இந்த 5 ராசிக்காரங்க பிரேக் அப் ஆனாலும் Ex-ஐ விடமாட்டாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
Gothumai Rava Kichadi Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான சுவையில் ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையுடன் சில பருப்புக்களை சேர்த்து கிச்சடி செய்து சாப்பிடுங்கள். இந்த கிச்சடி மிகவும் சுவையாக இருப்பதால், வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்தவற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவா கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* வேர்க்கடலை - 1/4 கப்
* கோதுமை ரவை - 1 கப்
வேக வைப்பதற்கு...
* ஊற வைத்த கோதுமை ரவை
* ஊற வைத்த பருப்பு
* தண்ணீர் - 6 கப்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த கோதுமை ரவை
* சுடுநீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு,
கடலைப் பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு மற்றொரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை ரவையை எடுத்துக் கொண்டு
நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த கோதுமை ரவை, பருப்புகள் ஆகியவற்றை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து வறுத்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சீரகம், வரமிளகாய், பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்
சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து கிளறி
வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த கோதுமை ரவையை சேர்த்து கிளறி, கிச்சடி
மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுநீரை ஊற்றி கிளறி, கொதி
விட்டு கொத்தமல்லியைத் தூவி, முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால்,
சுவையான கோதுமை ரவா கிச்சடி தயார்.



Click it and Unblock the Notifications
