Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
10 நாள் வரை கெட்டுப்போகாத ஆந்திரா கோங்குரா தொக்கு - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாருங்க...
Andhra Special Gongura Thokku Recipe In Tamil: கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் வலுவாக இருக்கும். கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான சத்துக்களைக் கொண்டிருக்கும். அந்த கீரையில் ஒரு வகையான கீரை தான் புளிச்சக்கீரை. இந்த கீரை புளிப்புச்சுவையுடன் இருக்கும் மற்றும் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
இந்த கீரையை ஆந்திராவில் அதிகம் சமைத்து சாப்பிடுவார்கள். புளிச்சக்கீரையைத் தான் ஆந்திராவில் கோங்குரா என்று அழைப்பர். இந்த கோங்குரா கீரையைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு பிரபலமான ஆந்திரா ரெசிபி தான் கோங்குரா தொக்கு. இந்த கோங்குரா தொக்கை சரியான பக்குவத்தில் செய்தால், 10 நாட்கள் வரை வைத்து ஊறுகாய் போன்று சாப்பிடலாம்.

உங்களுக்கு கோங்குரா தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோங்குரா தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளிச்சக்கீரை/கோங்குரா கீரை - 2 கட்டு
பொடி செய்வதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* புளி - சிறிய துண்டு
* கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 7-8 (தட்டிக் கொள்ளவும்)
செய்முறை:
* முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து, நீரில் கழுவிவிட்டு,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி விதை, சீரகம், வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், புளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் கல் உப்பை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சக்கீரையை போட்டு
சுருங்கும் வரை நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும். கீரை சுருங்கியதும்,
அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதையும் மிக்சர் ஜாரில் போட்டு, லேசாக ஒருமுறை அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை தட்டிப்
போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள புளிச்சக்கீரை மற்றும் பொடியை சேர்த்து
மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி, 5 நிமிடம் எண்ணெய் விட்டு வரும்
வரை வேக வைத்து இறக்கினால், சுவையான கோங்குரா தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
