Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
கோபி மசாலா கிரேவி
இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு கிரேவி செய்யுங்கள்.
இரவு சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியாமல் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு கிரேவி செய்யுங்கள். இந்த கோபி மசாலா கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கோபி மசாலா கிரேவி எப்படி செய்வதென்று தெரியாதா? கீழே கோபி மசாலா கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* பால் - 1/4 கப்
* உலர்ந்த வெந்தய கீரை - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து நீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி பச்சை வாசனை போக நன்கு 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் பால் சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவியானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் உலர்ந்த வெந்தய கீரை, வேக வைத்த காலிஃப்ளவர் சேர்த்து நன்கு மசாலாவில் காலிஃப்ளவரைக் கிளறிவிட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் மசாலா கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications