Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க..
Ganesh Chaturthi Special Ammini Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. இந்நாளில் விநாயக பெருமானுக்கு கொழுக்கட்டையை செய்து படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த கொழுக்கட்டையை இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை என இரண்டு விதங்களில் செய்யலாம். அதுவும் நீங்கள் எப்போதும் இனிப்பு கொழுக்கட்டையை தான் செய்வீர்களா?

உங்கள் வீட்டில் சர்க்கரை நோயாளிகள் உள்ளார்களா? அப்படியானால் அத்தகையவர்களுக்காக கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள். அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அம்மிணி கார கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கொழுக்கட்டைக்கு..
* கொழுக்கட்டை மாவு/பச்சரிசி மாவு - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1-2 டீஸ்பூன்
* சுடுநீர் - சிறிது
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 3
* தேங்காய் - 1/2 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1-2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த கொழுக்கட்டை
* அரைத்த விழுது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொண்டு,
அத்துடன் உப்பு, நெய் ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீரை ஊற்றி, நன்கு
மென்மையாக பிசைந்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள கொழுக்கட்டை மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து
உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தினுள்
வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த கொழுக்கட்டையை சேர்த்து 1 நிமிடம் கிளறி,
பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறி இறக்கி
கொத்தமல்லியைத் தூவினால், அம்மிணி கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
