Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
விநாயகர் சதுர்த்திக்கு இந்த புதுமையான கொழுக்கட்டையை செய்யுங்க.. டேஸ்ட் அருமையா இருக்கும்..
Ganesh Chaturthi Special Kolukattai: விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. அனைவரும் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை பலவிதமாக செய்து படைத்து வழிபட திட்டமிட்டிருப்போம். கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் அற்புதமாக இருக்கும்.
நீங்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு சற்று புதுமையான கொழுக்கட்டை செய்ய நினைத்தால், பாசுமதி அரிசியைப் பயன்படுத்தி வித்தியாசமான தோற்றத்தைத் தரக்கூடிய பிடிக்கொழுக்கட்டையை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு இந்த பிடிக்கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த பிடிக்கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி மாவு - 1 கப்
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* பாசுமதி அரிசி - 3 டேபிள் ஸ்பூன் (3 மணிநேரம் நீரில் ஊற
வைத்தது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மாவை
சேர்த்து, ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் போட்டுக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் பாசுமதி அரிசியை நீரில் போட்டு, 3 மணிநேரம் ஊற வைத்து,
அதையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, அத்துடன் உப்பு, துருவிய தேங்காய் மற்றும் நெய்
சேர்த்து, வெல்லத்தை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஒரு வாணலியில்
ஊற்றி அடுப்பில் வைத்து, பின் வறுத்த பச்சரிசி மாவை சேர்த்து நன்கு
கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* அதுவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, கிளறி விட வேண்டும். மாவானது
நன்கு திரண்டு வந்தால் அடுப்பை அனைத்துவிட்டு, ஒரு தட்டில் போட்டுக்
கொள்ள வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு மாவு ஆறியதும், கைகளால் நன்கு பிசைந்து
விட வேண்டும்.
* பின் சிறிது மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, பின் அதை ஊற வைத்த
பாசுமதி அரிசியில் போட்டு பிரட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி,
நீரானது சூடானதும், இட்லி தட்டில் நெய் தடவி, பின் ஒவ்வொரு குழியிலும்
ஒவ்வொரு உருண்டையை வைத்து, மூடி வைத்து, 15 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான பிடிக்கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications