Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஈரோடு ஸ்பெஷல் ஜப்பான் சிக்கன்
Erode Special Japan Chicken: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சிக்கனை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஈரோடு ஸ்பெஷல் ஜப்பான் சிக்கனை செய்யுங்கள். இந்த ஜப்பான் சிக்கன் நன்கு க்ரீமியாக ருசியாக இருக்கும்.
இந்த ஜப்பான் சிக்கன் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு மெஸ்ஸில் மிகவும் பிரபலமானது. முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம்.நீங்கள் இந்த ஈரோடு ஜப்பான் சிக்கனை வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா?

கீழே ஈரோடு ஸ்பெஷல் ஜப்பான் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5 (கீறியது)
* பால் - 2 கப்
* முந்திரி - 1/4 கப் (பொடி செய்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெள்ளை மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சிக்கனுக்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெள்ளை மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கிளறி, சோள மாவு, மைதா
மற்றும் சிறிது நீரைத் தெளித்து சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்க்க
வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பால், முந்திரி பொடி,
உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்னர் அதில் பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 3-4
நிமிடம் நன்கு சாஸ் சுண்டும் வரை கிளறி இறக்கினால், சுவையான ஈரோடு
ஜப்பான் சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











