Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
முட்டையை வெச்சு ஒருமுறை இப்படி சூப் செஞ்சு சாப்பிடுங்க.. குளிருக்கு இதமா இருக்கும்...
Egg Soup Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சூப் செய்து குடிப்பீர்களா? எப்போதும் காய்கறி, மட்டன், சிக்கன் ஆகியவற்றைக் கொண்டு தான் சூப் செய்திருப்பீர்கள். ஆனால் முட்டையைக் கொண்டு சூப் செய்திருக்கிறீர்களா? என்னது முட்டை சூப்பா என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம், முட்டையைக் கொண்டும் சூப் செய்யலாம். இந்த முட்டை சூப் குளிர் காலத்தில் குடிக்க இதமாக இருக்கும். இது தவிர சளி பிடித்திருக்கும் போதும் குடிக்க ஏற்றதாக இருக்கும். அதுமட்டுமின்றி, மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போரடித்திருந்தால், இந்த சூப்பை செய்தும் குடிக்கலாம்.

உங்களுக்கு முட்டை சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 1
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 சிறிய துண்டு (துருவியது)
* மீடியம் அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சாதம் வடித்த நீர்/காய்கறி வேக வைத்த நீர் - 1 1/2 கப்
* சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் சாதம் வடித்த நீர்/காய்கறி வேக வைத்த நீரை 1 1/2 கப்
ஊற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி
கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து சோள மாவை நீரில் கட்டிகளின்றி கரைத்து, கொதித்துக்
கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சோள மாவை
சேர்த்த பின் சூப் சற்று கெட்டியாகத் தொடங்கும்.
* சூப் சற்று கெட்டியாகி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில்
அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி
கொதித்ததும், அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான முட்டை சூப் தயார்.
Image Courtesy: Indian Cooking



Click it and Unblock the Notifications