மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப நைட் இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க...

Posted By:

Egg Rice Recipe In Tamil: நைட் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? மதியம் மீந்து போன சாதம் நிறைய இருக்கா? வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தை வெச்சு முட்டை ரைஸ் செஞ்சு சாப்பிடுங்கள். அதுவும் இந்த முட்டை ரைஸ் கடைகளில் விற்கப்படும் முட்டை ரைஸ் போன்று இருக்காது.

மாறாக, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வதால் சற்று வித்தியாசமான சுவையுடன் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த முட்டை ரைஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு இருக்கும். அதோடு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Egg Rice: How To Make a Egg Fried Rice Recipe

உங்களுக்கு முட்டை ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சாதம் - 2 கப்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் முட்டையை சேர்த்து நன்கு கிளறி, சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான முட்டை ரைஸ் தயார்.

Image Courtesy: Pinterest

[ of 5 - Users]
Story first published: Sunday, February 25, 2024, 20:04 [IST]
Desktop Bottom Promotion