Latest Updates
-
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்..
Muttai Podimas Pepper Pasta Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் அடிக்கடி பாஸ்தா கேட்பார்களா? நீங்கள் எப்போதும் ஒரே சுவையில் தான் பாஸ்தா செய்து கொடுப்பீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உங்கள் பிள்ளைகளுக்கு பாஸ்தா செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் பாஸ்தா மற்றும் முட்டையைக் கொண்டு முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்து கொடுங்கள்.

இந்த பாஸ்தா சுவையாக இருப்பதோடு, புரோட்டீன் அதிகம் நிறைந்ததும் கூட. எனவே இனிமேல் பாஸ்தா கேட்கும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தாவை செய்து கொடுங்கள். இதனால் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (துருவியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 4
* மிளகுத் தூள் - சிறிது + 1/2 டீஸ்பூன்
* பாஸ்தா - 100 கிராம் (வேக வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு மற்றும்
எண்ணெய் சேர்த்து வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த
நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் மசாலாவை வாணலியின் ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, பின் அதில் 2
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 4 முட்டைகளை உடைத்து ஊற்றி, மேலே சிறிது
உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து பொடிமாஸ் போன்று கிளறி விட்டு
வேக வைக்க வேண்டும்.
* பிறகு முட்டையை வெங்காய மசாலாவுடன் சேர்த்து கிளறி, முட்டை
மென்மையாக இருக்கும் போதே வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒன்று
சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* மசாலா பாஸ்தாவுடன் ஒன்று சேர்ந்ததும், அதில் 1/2 டீஸ்பூன் மிளகுத்
தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான முட்டை
பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா தயார்.



Click it and Unblock the Notifications
