Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
3 முட்டை இருந்தா.. 15 நிமிடத்தில் அசத்தலான காலை உணவை செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Egg Paratha Recipe In Tamil: காலையில் ஒரே மாதிரி இட்லி, தோசை என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கும், குழந்தைகளுக்கும் சத்தான ஒரு காலை உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 3 முட்டையும், சப்பாத்தி மாவும் உள்ளதா?
அப்படியானால் அந்த முட்டையைக் கொண்டு முட்டை பராத்தாவை செய்து கொடுங்கள். இந்த முட்டை பராத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டை பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு..
* முட்டை - 3 (வேக வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த முட்டைகளை துருவி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள்,
சீரகத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு
ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் 1/2
டீஸ்பூன் உப்பு சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கையால் நன்கு
ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு
நன்கு மென்மையாக பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் ஆனதும், பிசைந்த மாவை உருண்டைகளாக பிரித்து கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதை விட மெலிதாக
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே முட்டை மசாலாவை ஒரு 2 ஸ்பூன் வைத்து, ஒரு பாகத்தில்
அரை வட்ட அளவிற்கு பரப்பி விட வேண்டும். பின் அதை அப்படியே மடித்து
விட்டு, முனைகளை கைகளால் ஒருமுறை அழுத்தி விட வேண்டும்.
* அதன் பின் ஒரு ஃபோர்க் கரண்டியால் முனைப் பகுதியை அழுத்தி விட
வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து, தட்டில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ளதை ஒவ்வொன்றாக போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை பராத்தா தயார்.



Click it and Unblock the Notifications









