முட்டை கைமா ரெசிபி... சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் இந்த முட்டை கைமாவை உங்க பட்ஜெட்டில் செய்யலாம்...!

Posted By:

Egg Keema Recipe in Tamil: உலகில் அதிகளவு மக்களால் நுகரப்படும் அசைவ உணவென்றால் அது முட்டைதான். சிக்கன், மட்டன் மற்றும் மீன் சாப்பிடாதவர்கள் கூட முட்டையை விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையை அவித்தோ, பொரியல் செய்தோ, ஆம்லெட், ஆப்பாயில் என பல வடிவங்களில் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இட்லி, தோசை சப்பாத்தி போன்ற டிபன்களுக்கோ அல்லது சாதத்திற்கோ சைடிஷாக சமைக்கும் போது கிரேவி வடிவில் தயார் செய்யப்படுகிறது.

ரொட்டி மற்றும் சப்பாத்திக்கு வழக்கமான கிரேவி வடிவில் இல்லாமல் புதிய ஸ்டைலில் செய்யும் போது உங்கள் வீட்டில் அனைவரும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு முட்டை சைடிஷ்தான் முட்டை கைமா. கைமா என்றால் சிக்கன் அல்லது மட்டனில்தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. சிம்பிளாக பட்ஜெட்டிற்குள் முட்டையை வைத்தே சுவையாக செய்யலாம். இந்த பதிவில் முட்டையை வைத்து சூப்பரான முட்டை கைமா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Egg Keema Recipe How to Prepare Egg Keema
Photo Credit:

தேவையானப் பொருட்கள்:

- வேகவைத்த முட்டை - 4
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கிராம்பு - 3
- பட்டை - 1
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 1 கப்
- நறுக்கிய தக்காளி - 1
- நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லி தூள் - அரை ஸ்பூன்
- வேகவைத்த பட்டாணி - அரை கப்
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

- முட்டைகளை வேகவைத்து ஆறியதும் உரித்து உங்களுக்கு வேண்டிய அளவில் நறுக்கியோ அல்லது கேரட் போல துருவியோ வைத்துக்கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், சீரகம், பட்டை மற்றும் பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும்.

- அவை பொரியத் தொடங்கும் போது, ​​நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கவும்.

- தக்காளி நன்கு குலைந்ததும் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூளை சேர்க்கவும்.

- மசாலா பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதன்பின் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

- பின்னர் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.

- கிரேவி கொதிக்கும் போது அதில் கொத்தமல்லி இலைகளை போடவும்.

- கிரேவி திக்கானதும் அதில் துருவிய முட்டையை சேர்த்து அது கிரேவியுடன் நன்கு செட்டாகும் வரை கிளறவும்.

- சிறிதளவு மிளகுத்தூள் தூவி இறக்கினால் சுவையான முட்டை கைமா ரெடி.

- இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றுக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 28, 2024, 19:30 [IST]
Desktop Bottom Promotion