Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
4 முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி சூப் வைச்சு குடிங்க... உங்க எடை புயல் வேகத்துல குறையும்...!
Drumstick Soup Recipe in Tamil: தற்போது மாறி வரும் பருவநிலை காரணமாக குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படும். பலர் இதன் காரணமாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் குடிப்பது, பூண்டு மிளகு சேர்த்து ரசம் சாப்பிடுவது என பலவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள துவங்கி இருப்பார்கள். உங்கள் வீட்டிலும் சிலர் சளி, இருமலால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சூப் செய்து கொடுங்கள்.
முக்கியமாக உங்கள் வீட்டில் முருங்கைக்காய் இருந்தால், அதை வைத்து சூப் செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை சூப் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த சூப் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, உடலில் இரத்தத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உங்களுக்கு முருங்கைக்காய் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் சூப்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 முருங்கைக்காய்
- 1 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு
- 1 வெங்காயம்
- 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு
- 1 சிறிய தக்காளி
- 1 டேபிள்ஸ்பூன் மிளகு
- 1 டேபிள்ஸ்பூன் உப்பு (உங்கள் சுவைக்கேற்ப சரிசெய்யவும்)
- 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 பிரியாணி இலை
- 1 துண்டு இலவங்கப்பட்டை
- 2 கிராம்பு
செய்முறை:
- முருங்கைக்காயை கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகளை 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- முருங்கைக்காய் வெந்ததும், தண்ணீரை வடிகட்டாதீர்கள், ஏனெனில் இந்த தண்ணீரில் முருங்கைக்காயின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். எனவே, முருங்கைக்காயை வேகவைத்த தண்ணீரை சூப்பிற்கு பயன்படுத்தவும்.
- முருங்கைக்காயை வடிகட்டி தனியாக வைக்கவும். ஒவ்வொரு துண்டு முருங்கைக்காயிலிருந்தும் அதிலுள்ள சதையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பருப்பையும் இதேபோல வேகவைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடாக்கி அதில் எண்ணெயை ஊற்றவும். பின்னர் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயத்துடன் நறுக்கிய தக்காளி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- முருங்கைக்காய் தண்ணீரை வாணலியில் சேர்த்து, சூப் கலவையை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- சதையில் பாதியை தனியாக வைத்துவிட்டு பாதியை சூப்பில் சேர்த்து கலக்கவும். பின்னர் முருங்கைக்காய் சூப்பை மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின்னர் மீதமுள்ள முருங்கைக்காய் சதையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்காய் சூப் ரெடி!



Click it and Unblock the Notifications
