ஈஸியான மற்றும் ஆரோக்கியமான... தோசை சாண்ட்விச்

தற்போதைய குழந்தைகளுக்கு சாண்ட்விச் மிகவும் பிடிக்கிறது. ஆனால் பிரட் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. அதற்கு பதிலாக தோசையைக் கொண்டே ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான தோசை சாண்ட்விச் செய்யலாம்.

Posted By:

தற்போதைய குழந்தைகளுக்கு சாண்ட்விச் மிகவும் பிடிக்கிறது. ஆனால் பிரட் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. அதற்கு பதிலாக தோசையைக் கொண்டே ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான தோசை சாண்ட்விச் செய்யலாம். இந்த சாண்ட்விச் காலை வேளையில் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை அனைவரும் எளிதில் செய்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.

Dosa Sandwich Recipe In Tamil

உங்களுக்கு தோசை சாண்ட்விச் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தோசை சாண்ட்விச்சின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு - 2 கப்

* க்ரீன் சட்னி - 2 டேபிள் ஸ்பூன்

* குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* சீஸ் - 1/4 கப்

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* வெண்ணெய் - டோஸ்ட் செய்வதற்கு தேவையான அளவு

செய்முறறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின்பு குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஊத்தாப்பம் போன்று சிறு தோசையை சற்று தடிமனாக விட்டு, எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* பின் தோசையின் மேல் பகுதி வெந்ததும் அதைத் திருப்பிப் போடாமல், அப்படியே எடுக்க வேண்டும். இப்படி 4 தோசைகளை சுட்டு கொள்ள வேண்டும்.

* அடுத்து க்ரீன் சட்னிக்கு மிக்சர் ஜாரில் 1 கப் கொத்தமல்லிக்கு, 1/2 கப் புதினா, 2 பச்சை மிளகாய், 1/2 இன்ச் இஞ்சி, 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் சாட் மசாலா பவுடர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து இறக்கி, அதில் ஒரு எலுமிச்சையின் சாற்றினை ஊற்றி கிளறினால், க்ரீன் சட்னி தயார்.

* பின்னர் ஒரு தோசையை எடுத்து, அதன் மேல் சிறிது க்ரீன் சட்னியை தடவி, பின் வதக்கி வைத்துள்ள குடைமிளகாயை வைத்து, அதன் மேல் துருவிய சீஸை தூவ வேண்டும். பின் அதன் மேல் மற்றொரு தோசையை வைக்க வேண்டும்.

* அடுத்து சாண்ட்விச் மேக்கர் அல்லது தோசைக் கல்லில், தயாரித்த சாண்ட்விச்சை வைத்து, வெண்ணெய் தடவி நன்கு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும். இதேப் போல் அடுத்த செட் தோசைகளையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான தோசை சாண்ட்விச் தயார்.

Image Courtesy: sharmispassions

[ of 5 - Users]
Story first published: Thursday, October 13, 2022, 7:30 [IST]
Desktop Bottom Promotion