Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
தீபாவளிக்கு வாயில் வெச்சதும் கரையும் மைசூர்பாக் செய்யணுமா? இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
Diwali Special Mysorepak Recipe In Tamil: தீபாவளி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் கார பலகாரங்கள் மட்டுமின்றி, ஸ்வீட்டுகளையும் செய்வீர்களா? அதுவும் ஸ்வீட் என்றால் மைசூர்பாக் செய்யும் வழக்கம் உள்ளதா? ஆனால் நீங்கள் செய்யும் மைசூர்பாக் கல் போன்று இருக்குமா?
அப்படியானால் இந்த பக்குவத்தில் மைசூர்பாக் செய்யுங்கள். அதுவும் 1/4 கிலோ கடலை மாவைக் கொண்டு செய்தால், 2 கிலோ வரை மைசூர்பாக் கிடைக்கும். இந்த முறையில் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மனதில் கொண்டு மைசூர்பாக் செய்தால், அந்த மைசூர்பாக் வாயில் வைத்ததும் கரையும்படி மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் மைசூர்பாக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர்பாக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப் அல்லது 1/4 கிலோ
* வாசனை இல்லாத எண்ணெய் - 3/4 கப் + 1/4 கப்
* நெய் - 1 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* சர்க்கரை - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சல்லடையால் சலித்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3/4 கப் வாசனை எதுவும் இல்லாத எண்ணெய் ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி,
அத்துடன் 1 கப் நெய்யை ஊற்றி நன்கு சூடேற்றி, தனியாக கிண்ணத்தில்
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3/4 கப் நீரை ஊற்றி,
அத்துடன் 2 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு சர்க்கரையை கரைய வைக்க
வேண்டும்.
* சர்க்கரை கரைந்து, சிறு கம்பி பதத்திற்கு வந்ததும், தீயைக் குறைத்து
கலந்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றி தொடர்ந்து கை விடாமல் கிளறி விட
வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் காய்ச்சி
வைத்துள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி விட வேண்டும்.
முக்கியமாக இப்படி மைசூர்பாக் செய்யத் தொடங்கினால், கை விடாமல்
கிளறினால் தான், நல்ல நிறத்தில் மைசூர்பாக் கிடைக்கும்.
* மைசூர்பாக் பதம் என்று பார்த்தால், கரண்டியால் மாவை எடுத்து ஊற்றும்
போது, மாவு மடிப்பு மடிப்பாக விழும். அப்படி இருந்தால், மைசூர் பாக்
தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, நெய் தடவிய தட்டையான ட்ரே/தட்டில்
ஊற்றி சமப்படுத்தி விட வேண்டும்.
* மைசூர்பாக் வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே, கத்தியால்
சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
* மைசூர்பாக் முழுமையாக குளிர்ந்த பின், மற்றொரு ட்ரேயில்
கவிழ்த்துவிட்டு தட்டினால், சுவையான மைசூர்பாக் தயார்.



Click it and Unblock the Notifications
