Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
இந்த தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட் செய்யணுமா? அப்ப காஜூ கத்லி செஞ்சு.. வீட்டுல இருக்குறவங்கள அசத்துங்க...
Diwali Special Kaju Katli Recipe In Tamil: இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்தலான ஒரு ஸ்வீட் செய்து கொடுத்து அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் கடைகளில் கிலோவிற்கு 500 ரூபாய் என்று விற்கப்படும் காஜூ கத்லியை வீட்டில் செய்யுங்கள்.
என்னது காஜூ கத்லியா, இது செய்வதற்கு கடினமாக இருக்காதா? என்று கேட்கலாம். உண்மையில் காஜூ கத்லி மற்ற ஸ்வீட்களை விட செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த தீபாவளிக்கு வீட்டில் காஜூ கத்லியை செய்தால், நிச்சயம் அனைவரும் அசந்து போவார்கள்.

உங்களுக்கு காஜூ கத்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஜூ கத்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 2 கப்
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஈரமில்லாத மிக்சர் ஜாரில் 1 கப் முந்திரியை சேர்த்து
பொடித்துக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் அரைக்க வேண்டாம்,
இல்லாவிட்டால் முந்திரியில் இருந்து எண்ணெய் பிரியத் தொடங்கிவிடும்.
எனவே ஜார் அதிகம் சூடாகாத வகையில் லேசாக அரைத்து, முதலில் அதை
சல்லடையில் சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின் சல்லடையில் உள்ள எஞ்சிய பொடித்த முந்திரியை மீண்டும் ஜாரில்
போட்டு, அத்துடன் 1 கப் முந்திரியை சேர்த்து அரைத்து பொடி செய்து,
அதையும் சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மீண்டும் எஞ்சிய பொடித்த முந்திரியை ஜாரில் போட்டு நன்கு
பொடித்து, அதை முந்திரி பொடியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 கப்
சர்க்கரையை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி ஒரு கம்பி பதத்திற்கு பாகுவை
தயார் செய்ததும், குறைவான தீயில் வைத்து, பொடித்த முந்திரி பொடியை
சேர்த்து கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பால் பவுடரை சேர்த்து நன்கு சுருள கிளறி விட
வேண்டும்.
* பிறகு 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். இப்படி
குறைவான தீயிலேயே நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* பின் ஒரு பட்டர் பேப்பரை எடுத்து, அதில் நெய் தடவி, தயாரித்து
வைத்துள்ள கலவையை வைத்து, சூடாக இருக்கும் போதே பட்டர் பேப்பர்
உதவியைக் கொண்டு மடித்து விட்டு, மடித்து விட்டு சப்பாத்தி மாவு
பதத்திற்கு வரும் வரை பிசைய வேண்டும்.
* பின் சப்பாத்தியை உருட்டும் கட்டையைக் கொண்டு சற்று தடிமனாக
தேய்த்து, பின் கத்தியால் காஜூ கத்லி வடிவத்தில் வெட்டினால், சுவையான
காஜூ கத்லி தயார்.



Click it and Unblock the Notifications








