Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம்
தீபாவளிக்கு பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் வித்தியாசமான பலகாரங்களை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் சீனி பணியாரம் செய்யுங்கள்.
தீபாவளிக்கு பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் வித்தியாசமான பலகாரங்களை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் சீனி பணியாரம் செய்யுங்கள். இது இனிப்பு சுவையுடன் அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு சீனி பணியாரம் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனென்றால், செட்டிநாடு சீனி பணியாரத்தின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் செய்து, உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
MOST READ: தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* ஜவ்வரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். மாவானது தோவை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
* அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றிவிடுங்கள்.
* பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொவென்று மாறும் போது எடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான செட்டிநாடு சீனி பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications