Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
தீபாவளி ஸ்பெஷல்: பாசுந்தி
தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் என்ன பலகாரங்களை செய்யலாம் என்ற பட்டியலை நீங்கள் போட்டுக் கொண்டிருந்தால், அதில் பாசுந்தியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பாசுந்தியை தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் செய்தாலே போதும்.
தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் என்ன பலகாரங்களை செய்யலாம் என்ற பட்டியலை நீங்கள் போட்டுக் கொண்டிருந்தால், அதில் பாசுந்தியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பாசுந்தியை தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் செய்தாலே போதும். பாசுந்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது, அவர்களை அசத்த நினைத்தால், பாசுந்தியை செய்து கொடுங்கள்.

உங்களுக்கு பாசுந்தி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசுந்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1/2 லிட்டர்
* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
* நட்ஸ் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* குங்குமப்பூ - சிறிது
* பொடித்த நட்ஸ் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிதை எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அது பாதியாக குறையும் வரை காய்ச்ச வேண்டும். பால் பாதியாக குறைந்ததும், அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது குங்குமப்பூவை சேர்த்து கிளறி விட்டு, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இந்நிலையில் இது மலாய் போன்று உருவாக ஆரம்பிக்கும். இப்போது அதை தொடர்ந்து கிளறி, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியாக மற்றும் க்ரீமியாக தெரியும் போது, அதில் நட்ஸ்களை சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் பொடி செய்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைத்து பின் பரிமாறினால், சுவையான பாசுந்தி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications








