Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
திண்டுக்கல் ஃபேமஸ் பால் பன் - சிம்பிளா, ஜூஸியா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Dindigul Famous Paal Bun Recipe In Tamil: தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், நிச்சயம் எப்போதும் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பலகாரங்களை செய்யத் தெரிந்தால், பணத்தை மிச்சப்படுத்தலாம்.
அதுவும் உங்கள் பிள்ளைகள் ஸ்வீட் பிரியர்களா? அப்படியானால் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு அற்புதமான, அதுவும் ஜூஸியான ஸ்வீட் செய்து கொடுக்க நினைத்தால், திண்டுக்கல் ஃபேமஸ் பால் பன் செய்து கொடுங்கள். இந்த பால் பன் செய்வது மிகவும் சுலபம். அதுவும் வீட்டில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்களைக் கொண்டே சுவையான பால் பன்னை செய்யலாம்.

உங்களுக்கு திண்டுக்கல் ஃபேமஸ் பால் பன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் ஃபேமஸ் பால் பன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தயிர் - 1/2 கப்
* சர்க்கரை பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1 கப்
* தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சர்க்கரை பாகுவிற்கு..
* சர்க்கரை - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை பவுடர், ஆப்ப சோடா
மற்றும் நெய் சேர்த்து நன்கு அடித்து க்ரீம் போன்று கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் மைதா மாவை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* மாவானது பிசுபிசுப்பாகத் தான் இருக்கும். இருந்தாலும், அதில் 4
டேபிள் ஸ்பூன் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு சுழட்டி சுழட்டி
கிளறி விட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இந்த மாவை மூடி வைத்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ளுங்கள்.
* பின் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்து, பிசுபிசுப்பான நிலைக்கு
வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும்.
* மாவு 1 மணிநேரம் ஊறியதும், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், பிசைந்த
மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, எண்ணெயில் போட்டு, மிதமான
தீயில் வைத்து பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்து, சூடாக இருக்கும்
சர்க்கரை பாகுவில் சேர்த்து பிரட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும். இதேப் போன்று மீதமுள்ள மாவையும் எண்ணெயில் பொரித்து
எடுத்து, சர்க்கரை பாகுவில் போட்டு எடுத்தால், சுவையான பால் பன்
தயார்.



Click it and Unblock the Notifications
