Latest Updates
-
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? என்ன சைடு டிஷ் அதற்கு செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அதற்காக பன்னீரைக் கொண்டு வெறும் கிரேவி, மசாலா செய்யாமல், சற்று வித்தியாசமாக புர்ஜி செய்து கொடுங்கள். அதுவும் தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செய்து கொடுங்கள்.
இந்த பன்னீர் புர்ஜி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, புல்காவுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் பன்னீர் புர்ஜியை மாலை வேளையில் குழந்தைகளுக்கு பசிக்கும் போதும் செய்து கொடுக்கலாம். முக்கியமாக இது செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக
நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பன்னீரைத் துருவி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து குறைவான தீயில் வைத்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய பன்னீரை சேர்த்து மசாலா ஒன்று சேரும் வகையில்
கிளறி, முடி வைத்து 3 நிமிடம் பன்னீரை வேக வைக்க வேண்டும்.
* அதிகமாக பன்னீரை வேக வைக்க வேண்டாம். இல்லாவிட்டால் பன்னீர் ரப்பர்
போன்று மாறிவிடும். எனவே 3 நிமிடம் ஆனதும் பன்னீரை இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி
தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications