Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா?
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... தாபா ஸ்டைல் பச்சை பயறு தால்
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, நாண் அல்லது புல்கா செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
இந்த ரெசிபியில் புரோட்டின் அதிகம் இருப்பதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. உங்களுக்கு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பச்சை பயறு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* முதலில் பாசி பயறை 3 கப் நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி தானதும், இஞ்சி,
தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து, மஞ்சள் தூள், கரம்
மசாலா, சுவைக்கேற்ப உப்பு தூவி, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை
மூடி வைத்து, 3-4 விசில் விட வேண்டும்.
* பிறகு மிதமான தீயில் வைத்து, மீண்டும் 10 நிமிடம் பயறை வேக வைத்து
இறக்க வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவ
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, குக்கரில்
உள்ள தால் உடன் சேர்த்து கிளறினால், சுவையான தாபா ஸ்டைல் பச்சை பயறு
தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications